SHARE

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னரும்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை அவர்கள் ஈர்த்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், எமது நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது என்றும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரை அல்லது குரைந்தபட்சம் 13 வது திருத்தத்தை முழுவதுமாக செயற்படுத்தினால் மட்டுமே தற்போதைய பொருளாதார அவலநிலையில் இருந்து நமது நாட்டை மீட்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email