SHARE

பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வால் இலங்கையிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் தப்பி தமிழகம் வருவதாக தகவல் கிடைத்ததால் மரைன் பொலிஸார் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருட்களின் விலைவாசியை குறைக்கக் கோரி அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக 50க்கும் மேற்பட்டோர் தமிழகம் வருவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் தொண்டி, தேவிபட்டினம் மரைன் பொலிஸார் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நகர் பகுதியிலும் இரகசிய விசாரணை நடந்து வருகிறது. சந்தேகப்படும்படியான படகுகளை, நபர்களை கடலில் கண்டால் உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email