SHARE

#GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பெரும் பொரளாதார நெருக்கடியில் மக்கள் என்றுமில்லாத அளவில் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அவர்களின் குடும்ப ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என கோட்டபாயவின் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

இதேவேளை #WeAreWithGota என்ற எதிர் டுவிட்டர் ஹாஷ்டாக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பகிர்ந்துவருகின்றனர்.

எவ்வாறாயினும் #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் தொடர்ந்தும் இலங்கையில் ட்ரெண்டிங்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email