SHARE
image_pdfPRINT

பாராளுமன்றத்தில் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.

இதன்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.