SHARE

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ் மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும் அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கு ஜனாதிபதி இதனை தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email