SHARE

இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் கரி நாளாக இன்றைய நாளை அனுஸ்டித்தத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. இந்நிலையிலேயே தாயகத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம் பெயர் தமிழர்களாலும் இன்று எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் ஒன்று திரண்ட புலம் பெயர் தமிழர்கள் தமிழீழ தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூதரகத்தின் வாயிற் கூரையில் பறக்கவிடப்பட்ட இலங்கையின் தேசியக் கொடிக்கு நிகராக தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு குறித்த தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரியங்கா பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் என சமிக்ஞை காட்டியதினையடுத்து லண்டனில் உள்ள நீதிமன்றில் வழக்கினை எதிர்கொண்டதுடன் லண்டனை விட்டு இலங்கைக்கு தப்பியோடியமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email