SHARE

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் கணக்கிடப்படாமலேயே உள்ளது.

போரினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கிட்டு ஆவணப்படுத்தினால் இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை நிரூபிக்கமுடியும்

அந்தவகையில் இலங்கையில் யுத்தத்தால் இறந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி அவற்றை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பித்து இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை சட்டரீதியாக நிரூபிக்கும் வகையில் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Truth and Justice Project – ITJP) தகவல்களை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து உறுதிப்படுத்தும் அமெரிக்காவிலுள்ள மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (Human Rights Data Analysis Group – HRDA) வுடன் இணைந்து
இலங்கையில் “இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்திட்டம்“ (Counting the Death Project) என்ற பணியை உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் நினைவுகூறப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வின் போது மேற்படி இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்பாட்டில் அதன் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் அவர்களை அவர்களை தொடர்பு கொண்ட நமது ஈழநாடு குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும்இ அதன் செயன்முறை தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும்இ இதற்கு தமிழ்மக்கள் மற்றும் அமைப்புக்கள் எவ்வாறு உதவலாம் என்றது குறித்தும் ஒரு விளக்கத்தை வழங்கும்படி கேட்டிருந்தது.

அதனடிப்படையில் நிரோஜன் பாலசிங்கம், சதீஸ் குலசேகரம், வினோதன் காந்தலிங்கம், விஜய் விவேகானந்தன், பிரசன்னா பாலசந்தந்திரன், விதுரா விவேகானந்தன் ஆகியோர் வழங்கிய சிறப்பு பேட்டிகள் பின்வருமாறு,

நிரோஜன் பாலசிங்கம்

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் பெயர் விபரங்கள் இதுவரையில் திரட்டப்படாமல் உள்ள நிலையில்இ இந்த விபரங்களை திரட்டும் முக்கிய பணியை ITJP மற்றும் HRDA ஆகிய சர்வதேச நிறுவங்கள் இணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கடந்த பெப்ரவரி 2019 இல் ஆரம்பித்தன.

ITJP யின் பணிப்பாளரானஇ முன்னாள் ஐ.நா. நிபுனரும் பிரபல மனித உரிமை சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா அவர்களும் HRDAG யின் பணிப்பாளரான பற்றிக் போல் அவர்களும் இதை வழிநடத்துகின்றனர்.

அமெரிக்காவை தளமாக கொண்ட ர்சுனுயுபு என்ற நிறுவனம் பல விருது பெற்ற விஞ்ஞானிகளை கொண்டு இயங்குவதுடன் குவாட்டமாலாஇ கொலம்பியாஇ கொசோவாஇ சியரா லியோன் மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றுகளுக்கு நம்பகமான தகவல்களை தொகுத்து வழங்கிய 30 வருட அனுபவத்தை கொண்ட அமைப்பாகும்.

இந்த பணியின் இலக்கானது முடிந்தளவில் கொல்லப்பட்ட மக்களின் விரங்களை திரட்டுவதுடன்இ விபரங்கள் கிடைக்காத மக்களின் எண்ணிக்கையை புள்ளிவிபர மற்றும் விஞ்ஞான ரீதியில் கணிப்பிட்டுஇ ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை நிறுவுவதாகும். இது எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய சர்வதேச சட்ட விசாரணைகளுக்கு பெரும் பலத்தை சேர்ப்பதுடன் இறந்தவர்களுக்கான நியாயத்தையும் பெற்றுத்தரும் என நம்புகிறோம்.

சதீஸ் குலசேகரம்

2019 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் இறந்தவர்களின் விபரங்களையே நாங்கள் சேகரிக்கின்றோம். தமிழ்இ சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. இதில் போர் வீரர்கள் பொதுமக்கள் என நாங்கள் வேறுபடுத்தவில்லை. அனைவரையுமே உள்ளடக்கின்றோம்.

ஏனெனின் இறுதிப் போரின் போது யார் ஆயுதம் தாங்கியிருந்தார்கள் யார் பொது மக்கள் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் சிரமமானதாகும்.
அதேவேளை இக்காலப்பகுதியில் பட்டினி அல்லது நோயினால் இறந்திருந்தாலும் அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்படுகின்றது. ஏனெனில் போருடன் தொடர்புபட்டு வன்முறையால் இறந்தவர்கள் தொடர்பில் நாங்கள் அதி முக்கியத்துவம் கொடுக்கின்றோம். காணாமல் போனோரையும் நாங்கள் பதிவு செய்கின்றோம். அதனால் அவர்களை இறந்ததாக கணக்கெடுப்பதாக அமையாது. இதில் காணாமல் போனவர்களை வேறுபடுத்தி காட்டப்படுகிறது.

மேலும் எம் தமிழ் இனத்தில் இத்தனை எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை கணக்கிடுவதன் மூலம் எமக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இன அழிப்பே என்பதை உறுதிப்படுத்த முடியும். எனவே இந்த செயல்திட்டத்தில் அனைவரும் முன்வந்து பங்களிப்பினை வழங்க வேண்டும் என நான் கோரிநிற்கிறேன்.

வினோதன் காந்தலிங்கம்
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் இனத்துக்கு எதிரான மாபெரும் இன அழிப்பு போரை அரங்கேற்றிய ராஜபக்ஷக்களே தற்போது மீண்டும் ஆட்சிப்பீடத்தில் இருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அனைத்திலும் எண்ணிக்கையை மறைப்படிப்புச் செய்து சர்வதேசத்தின் நீதிப்பொறிமுறைக்குள் தங்களை சிக்கிக்கொள்ளாத வண்ணம் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் மூலம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையையே செய்துள்ளது என்பதை நிரூபிக்க முடியும் என நாம் நம்புகிறேன்.

விஜய் விவேகானந்தன்

இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறை (Transitional Justice) மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை நீதி (Remedial Justice) என்பவற்றுக்கு மிகவும் அத்தியாவசியமாக இந்த பணி இருக்கின்ற போதிலும் இது இன்னமும் தமிழர்கள் மத்தியில் பிரபலம் அடையாத காரணத்தால்இ மக்களிடம் இருந்தும்இ பொது அமைப்புக்களிடம் இருந்தும் விபரங்களை பெற்றுக்கொள்ளுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த முக்கிய பணியை இன்னும் தாமதிப்பது ஈழத்தமிழ் மக்களான எமக்கான நீதி தேடலை நாமே தாமதிப்பதாகும். இதற்காக ஒத்துழைப்பை தமிழ் மக்களிடமும்இ சமூகநலன் சார் அமைப்புக்களிடமும் கோருகிறோம்.

பிரசன்னா பாலசந்தந்திரன்

யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் உண்மையான இறப்பு எண்ணிக்கையை அறிய முடியாதிருப்பது அதிர்ச்சிக்குரியது. இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது எமது இனத்தின் மீது எவ்வாறு நீண்ணடதொரு இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்க முடியும். மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய அரசே தற்போது மீண்டும் ஆட்சியில் உள்ளி நிலையில் தொடர்ந்தும் தமிழர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச ரீதியான ஒரு தீர்வினை நோக்கியே நாம் நகரவேண்டும். அதனாலேயே ITJP யின் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்து செய்துவருகிறோம்.

விதுரா விவேகானந்தன்

உலகம் முழுவதுமுள்ள உறவுகளிடம் நாம் கோருகிறோம். உங்கள் உறவினர் நண்பர்கள் அயலவர்களிடம் பேசி அவர்களுக்கு தெரிந்த அறிந்த மரணித்தவர்களின் பெயர்களை சேகரியுங்கள். இதில் விபரங்களை சேகரிப்பவர்கள் தொடர்பில் இரகசியம் பேணப்படும் என்பதை இங்கு நான் உறுதிப்படுத்துகின்றேன்.

யுத்தக் குற்றவாளிகளை சர்வதேச நீதி மன்றில் முன்னிலைப்படுத்த சிறந்த சாட்சியத்தை ஏற்படுத்தவுள்ள இந்த கணக்கெடுப்பின் மூலம் அநியாயமாக கொல்லப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்க நான் செய்யவேண்டிய கடமையாக இதை நான் பார்க்கிறேன்.

Print Friendly, PDF & Email