SHARE

இராணுவத்தினரை தமிழ் மக்களுடன் இணைத்து பலவித செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கு இந்த அரசு விரும்புகின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பிருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் சமூக மட்ட அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கிய பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மக்களையும் இராணுவத்தையும் இணைத்து செயல்பட வைப்பதற்கு மற்றையவர்களது நிலைப்பாடு என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் நான் அதற்கு எதிரானவன். மக்களுடைய காணிகளை நாங்களே எடுத்து அதனை மக்களுக்குபயன் தரக்கூடியவாறு மாற்றி யமைக்கவேண்டும்.

மாறாக இராணுவத்தினரிடம் மக்களது காணிகளை வழங்கமுடியாது. பிரதேச செயலர்கள் தமது பிரிவிற்குட்பட்ட காணிகளை ஏதோ ஒரு உபாயத்தின் மூலமாக அதன் உரிமையாளர்களை அடையாளங்கண்டு குத்த கைக்கு எடுத்து அதனை மக்களது தேவைக்காக பயன்படுத்தலாம். இங்கிருக்கின்ற மக்கள் தங்க ளுடைய காணிகளை தாங்களே பயன்படுத்தி அதன் மூலமாக வரு மானத்தை எடுக்க வழிய மைக்கவேண்டும். இந்த சிந்த னையை தங்களிடம் சேர்ப்பிக்க விரும்புகின்றேன். வருங்காலம் மிக மோசமாக அமையக்கூடிய நிலையை நாம் எமது கண்களுாடாக தற் போது காண்கிறோம். எனவே வருங்காலத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே முடிவெடுக்கவேண்டும்’ என்றார்.

Print Friendly, PDF & Email