மனித உரிமை மீறல்களை சகித்துக்கொள்ள மாட்டோம். எனவே போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மீது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைவிதிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Hon.Elliot Colburn மற்றும் Hon.Theresa Villiers ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாக்கு எதிரான தடை தொடர்பான இராஜதந்திர நகர்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் முன்னர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Rt.Hon.Sir Ed Davey MP , Hon.stephen timms MP, Hon. Janet Daby, Gareth Thomas MP, Virendra Sharma, Sarah Jones உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ள நிலையில் இன்று எம்.பி.க்களான Hon.Elliot Colburn மற்றும் Hon.Theresa Villiers ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள காணொளியில் சில்வா ஆயுதப் போரின் முடிவில் 58வது பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவருக்கு ஏற்கனவே பயணத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் வழியை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.