SHARE

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாகஇ பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறும் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், நேற்றைய தினம் Folkestone and Hythe பகுதிக்கான பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Damian Collins MP அவர்களுடனான இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை செயற்பாட்டாளரான அரவிந்தராஜ் நல்லதம்பி அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சந்திப்பு, கோவிட் காரணமாக மெய்நிகர் வழி ஊடாக (Zoom) வழியாக இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், விடுதலைப்புலிகள் மீதான தடையால் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்இ இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் இன அழிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துச்சொல்லப்பட்டது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது. இக்காலக்கெடு நெருங்கி வரும் நிலையில்இ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மூலம் நீதிமன்றில் பெறப்பட்ட வெற்றியை நடைமுறைப்படுத்தி, அரசியல் வெற்றியாக மாற்றும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இந்த கலந்துரையாடலில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரான சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் உட்பட பலர் கந்துகொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email