SHARE
image_pdfPRINT

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தொிவித்துள்ளனர்.

சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதான மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரை நேற்று 28.09.21 காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  காணாமற்போகும் போது இவர் (டி-சேர்ட் மற்றும் கிரே கலர் சோட்ஸ்) அணிந்து இருந்தார் என்றும், இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை உடற்பயிற்சிக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை கண்டால் 0779498025, 0772836495 மற்றும் 0777948389 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.