SHARE

கூட்டமைப்புக்குள் இருந்து குழப்பும் அழுகிப்போன சட்ட மூளையை வெளியே தூக்கிப்போடுங்கள் என்கிறார் காசி ஆனாந்தன்

புலிகளின் தூய்மையான விடுதலைப்போராட்ட வரலாற்றை நன்கு தெரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் புலிகளை போர்க் குற்றவாளிகளாக ஒப்புக் கொள்வது சரிதான என ஈழத்தின் மூத்த கவிஞரும் ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவருமான காசிஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

புலிகளை களங்கப்படுத்தும் உங்கள் கடிதம் தமிழ்தேசிய கூட்டமைப்பையே களங்கப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ள அவர் யாரோ ஒரு அழுகிப் போன சட்ட மூளையே உங்களைக் குழப்புகிறது – அந்தக் கெட்ட மூளையைக் கூட்டமைப்புக்கு வெளியே தூக்கிப் போடுங்கள் என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாதம்; ஆரம்பமாகவுள்ள நிலையில் ‘2009 இல் – முள்ளிவாய்க்கால் போரில் சிறீலங்காவின் படைகளும் – விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே’ என்னும் ஐ.நா. ஆய்வாளர் அறிக்கையை ஏற்றுக் கொண்டு மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக – அல்லது அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள் செய்து குறித்து வெளியுட்டுள்ள அறிக்கையிலேயே காசிஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியுட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

TNA-Kasi-Anandhan-Arikkai-7-9-2021

Print Friendly, PDF & Email