SHARE

நமது ஈழநாட்டின் பகுதிநேர ஊடகவியலாளரான சகாதேவன் நிலக்சன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு இன்று 14 ஆம் ஆண்டு நினைவேந்தல். அவருக்கு நமது ஈழநாட்டின் அஞ்சலிகள்

நமது ஈழநாட்டின் பகுதிநேர ஊடகவியலாளரும் யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ்.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளையில்இ திடீரென அதிகாலை 5 மணியளவில் அங்கு சென்ற ஆயுதாரிகள்இ நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று நாவலர் வீதியில் அமைந்திருந்த நமது ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தை அத்துமீறி சோதனை நடத்திய இராணுவம் நமது ஊழியர்களை அச்சுறுத்தியதுடன் உடமைகளையும் தீ வைத்து கொழுத்தினர். இவற்றையும் மீறி பத்திரிகை தொடர்ந்து இயங்கிய போது எமது ஊழியர்களை இராணுவத்தினர் குறி வைக்கத் தொடங்கினர்.

இந்நிலையிலேயே எமது ஊடகத்திற்கு பகு நேர பணியாளர்களாக செயற்பட்ட இளம் ஊடகவியலாளர்களான செல்வராஜா ரஜிவர்மன் 2007 ஏப்பரல் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டு 4 மாதங்களில் சகாதேவன் நிலக்சனும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தி சுடரேற்றப்பட்டது.

Print Friendly, PDF & Email