SHARE
image_pdfPRINT

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த ஹிஷாலினியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறுமியின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமியின்  சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்த அனுமதி வழங்குமாறு பொலிஸாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.