SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!,  அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்கதே, உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்! உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண பொலிஸார், போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியமையை தொடர்ந்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.