SHARE
image_pdfPRINT

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னாள் அவரது மெய்ப்பாதுகாவலரினால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க முற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்கு வாகனமொன்றின் ஊடாக வருகை தந்த போராட்டக்காரர்கள், மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டு  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேறொரு  பகுதிக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க முயன்றப்போது அவர்கள் பயணித்த வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் கைது செய்து, மட்டக்களப்பு பொலிஸில் தடுப்பு காவலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.