SHARE
image_pdfPRINT

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.