SHARE
image_pdfPRINT

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர்.

அதன்படி, மாத்தளை பகுதியிலேயே  அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  குளியாப்பிட்டியில் 88 பேரும் நிக்கவரெட்டிய பகுதியில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 21 ஆயிரத்து 807 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.