SHARE

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதை அடுத்து பேசிய சிறீதரன், இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே தமிழர்கள் அவர்களிடம் நீதிகோருவதாகவும் குறிப்பிட்டார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை கொல்லப்பட்ட சிறுவர்கள் உட்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை நினைவுகூருவதற்கு கூட இந்த அரசாங்கம் தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டமை இன அழிப்பு இல்லையென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயங்கவேண்டும் என்றும் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

Print Friendly, PDF & Email