SHARE

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் நேற்று சபையின் 39ஆவது அமர்வு நடத்தப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு,  நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.ஜீவனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.