SHARE
image_pdfPRINT

பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சரிந்து செல்லும் தனது செல்வாக்கை மீட்பதற்கான கோத்தாபய அரசின் திட்டமே யாழ்ப்பாணம் மாநகர மேயரின் கைது. புலிப் பூச்சாண்டி காட்டி தங்கள் வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பும் ராஜபக்சக்களின் வழமையான உத்தியே இது. தங்கள் அரசியல் நலனுக்காக தமிழ் மக்களை இவ்வாறு அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை அரசு நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ. சரவணபவன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.