SHARE
image_pdfPRINT

அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க நாளை மறுதினம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி கோரி திருமதி அம்பிகை செல்வக்குமார் முன்னெடுத்துவரும் அகிம்சைவழியிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் இரு வாரங்களை (14 நாட்கள்) அடைகின்ற.

அந்தவகையில் அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை Kenton Road, Harrow, HA3 9NR எனும் இடத்திலிருந்து மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையிலேயே இந்த எழுச்சிப்பேரணிக்கு அரசியல், அமைப்பு, கட்சி வேறுபாடின்றி ஒன்று திரளுமாறு அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

https://youtu.be/aWPjz5k_zlk