SHARE
image_pdfPRINT

டெல்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் ராம் சங்கர் உறுதி

அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கை மற்றும் போராட்டம் பிரித்தானியா உட்பட அனைத்து உலக நாடுகளிற்கும் எடுத்துச்செல்லப்படும் என தெரிவித்த இந்திய உச்ச நீதி மன்ற வழக்கறிஞரும் டெல்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயலருமான ராம் சங்கர் அனைத்து உலக நாடுகளின் தலைவர்களுக்கும் ஒவ்வொரு சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பிலும் கடிதங்கள் அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளார்.

தமிழர்களுக்கான நீதி கோரி பிரித்தானியாவில் உண்ணா விரதப்போராட்டத்தை மேற்கொண்டு வரும் திருமதி அம்பிகை செல்வக்குமாரின் 8 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு அவர் கூறினார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகநாடுகளிற்கு முதன் முதலில் மனித உரிமை விடயத்தினை கற்றகொடுத்த பிரித்தானியா கண்டிப்பாக அம்பிகையின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என நம்புகிறேன்.

அதேவேளை மனித உரிமைகள் மீறப்படும் இலங்கையில் மாபெரும் உரிமை மீறல்களை அரங்கேற்றிய ராஜபக்ஷவின் அரசு சர்வதேச சட்டத்தின் படி விசாரணை செய்யப்பட்டு விரைவில் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

https://youtu.be/jUZIhB0lebw