SHARE
image_pdfPRINT

இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரியும் இனப்படுகொலைக்கு நீதிகோரியும் பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருமதி அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்படும் உயிர்த்தியாக உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

தமிழின விடுதலைக்காய் அகிம்சைவழியில் உயிர்த்தியாகிகளான தியாக தீபங்களான தீலீபன் அண்ணா மற்றும் அன்னை பூபதி ஆகியோரை வணங்கி இன்றைய நான்காவது நாளிலும் தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலும் இவரது போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.