SHARE

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி நகர்கின்றது.

அம்பாறை, பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் குறித்த பேரணி, இன்று மூன்றாவது நாளில் திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்தது.

இந்நிலையில், இடையில் சிறு தாக்குதலுக்கும் உள்ளான பேரணி முல்லைத் தீவைச் சென்றடைந்து பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்குச் சென்றது.

அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர், அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணி புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கிளிநொச்சி ஊடாக வவுனியா நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.

Print Friendly, PDF & Email