SHARE
image_pdfPRINT

இராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன் வெளியானது கூட்டு அறிக்கை

இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஜனாதிபதியின் கைகளை அதிகார மயமாக்கல், உறவினர் ஆதரவுக் கொள்கை, நண்பர்களுக்கு பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகளிற்கு எதிராக அப்போதும் இருக்கையில் அதிர்ச்சியளிக்கும் ஆட்களை நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது ஒரு திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும் என குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் பிரதானமாக முன்னாள் இராணுவ அதிகாரியான தற்போதைய ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்ஷவினால் அண்மையில் முக்கிய அரச பதவிகளில் அமர்த்தப்பட்ட 39 இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசுவசமான இராணுவ அதிகாரிகள் கொரோனாவுக்கான பதில் நடவடிக்கை, பொலிஸ், புலனாய்வு சேவைகள், சிறைகள், வெளிநாட்டுக் கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படைத் தேவைச் சேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு மற்றும் இறுதியாக இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றில் அதிகாரத்தை செலுத்திவருவதை இந்த அட்டவணை காட்டுகின்றது.

ENGLISH-Battlefield-to-Boardroom-copy