SHARE
image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைஅரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 11 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, யாழ்ப்பணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மதத் தலைவர்கள் கூடி கிளிநொச்சியில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.