SHARE
image_pdfPRINT

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

” இலங்கையின் சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கைதிகள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைத்திருப்பதனால் , அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் நிலையுள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில் நிபந்தனைகள் இன்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். ” என்றார்.