SHARE

”பாலண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடிய போதும் தாங்க முடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும் தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தை தொட்டு நின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது. ” -தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்

பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ்மக்களின் சுதந்திரபோராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர்  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

தாயகத்தில் போர் உக்கிரம்பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த்த முடியாத சூழலிலும் உடல்நலத்தினை கருத்தில் கொள்ளாது பன்னாட்டிற்கு சென்று  தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

இவரது பெரும் போராட்டப்பணிக்காக “தேசத்தின் குரல்” என தேசியத்தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார்.

Print Friendly, PDF & Email