SHARE

யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும், முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மழை காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. அத்துடன் கிணறுகளில் வெள்ள நீரும் கலந்து உள்ளன அவற்றை அவற்றை பருகுவதனால், வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் என்பன ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் கொதித்து ஆறிய நீரினை பருகுமாறும், கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Print Friendly, PDF & Email