SHARE
image_pdfPRINT

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண – சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  கல்லுணடாய்  பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.