SHARE


மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நீக்கப்படமாட்டாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாக ஊழஎனை – 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இதற்கமைவாக, தற்பொழுது மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 2020 நவம்பர் மாதம் 02 திகதி காலை 5.00 மணி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணி வரையில் மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.


மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தில், எஹலியகொடை பொலிஸ் பிரிவிலும், குருநாகல் மாநகரசபை எல்லைப் பகுதியிலும், குளியாப்பிட்டி பொலிஸ் எல்லை பகுதியிலும் இவ்வாறே 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் 2020 நவம்பர் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஊழஎனை – 19 வைரஸ் தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email