SHARE
image_pdfPRINT

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி மருத்துவமனைக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக வந்த 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்பிட்டியில் வசிக்கும் குறித்த நபர் பேலியகொடா மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்லும் லொரி சாரதியின் உதவியாளராக பணியாற்றியதாக அறியமுடிகின்றது.

இறந்தவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதை அறிய சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.