SHARE
image_pdfPRINT

நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சியின் கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்கள் இரண்டு சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையினையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் தனியார் கல்வி நிலையங்களை மீள் அறிவித்தல் வரை மூடிவைக்கும்படி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வறிவித்தலைமீறி தொடர்ந்தும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பிலேயே மேற்படி கல்வி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய நெல்லியடி சுகாதார பரிசோதகரால் இத் தனியார் கல்வி நிறுவனங்கள் இரண்டிற்கும் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது