SHARE
image_pdfPRINT

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற –  டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

”மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரைபடித்துக்கொண்டிருந்தார். நாம் நித்திரையாகிவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஊர் மக்களுடன் இணைந்து தேடிய நிலையில் இன்று (29) காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாகக் கிடப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.