SHARE
image_pdfPRINT

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை (செப்.26) தொண்டைமனாறு செல்வச் சந்நிதியில்  முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்தத்  தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்தத் தடை உத்தரவு வழங்கட்டுள்ளது.