SHARE
image_pdfPRINT

அம்பாறை அக்கரைப்பற்று மொட்டையா மலையின் மேல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சாகாமம் வயல் பகுதியில் உள்ள மொட்டை மலையில் மேல் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை இன்று காலையில் கண்ட விவசாயிகள் காவல்துறைக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உருக்குலைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இதுவரை சடலம் அடையாளம் காணவில்லை.