SHARE

“நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் பெரு வெற்றியடைந்துள்ள அரச தரப்புக்கு எதிரான கருத்துகளை உடையவர்கள் பெரும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் அபாய நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது” என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச கொள்கைகளுக்கு சவால் விடுபவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் எனப் பல்வேறு தரப்பினர் கோட்ட தரப்பால் பெரும் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்படும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சிறுபான்மையினத்தினர் மற்றும் அவர்களின் மத நிலைப்பாடுகளுக்கு எதிராக தமது கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதுடன், யுத்த கால அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுப்போர் மீதான அடக்குமுறைகளும் அதிகரிக்கும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த காலத்து மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் நிறைந்த நிலைக்கே தற்போது கோட்ட தரப்பும் வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநரான மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் மீண்டும் அடக்குமுறைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை நினைவில் கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email