SHARE

பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணித்தியாலத்தில் 917 அதிகரித்து மொத்த இறப்பு எண்ணிக்கை 9,875 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் திணைக்களத் தகவல்களின்படி, பிரிட்டனில் ஆரம்பம் முதல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை கொரோனா வைரஸுக்கு நேர்மறை பரிசோதனை செய்யப்பட்டது வரையான காலப் பகுதியில் மொத்தம் 9,875 தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பிரிட்டனில் சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 334,974 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 18,091 சோதனைகள் அடங்கும்.

பரிசோதிக்கப்பட்ட 269,598 பேரில், 78,991 பேர் கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email