SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சிங்கள மாணவி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (22) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மாணவியை கொலைசெய்துவிட்டு கொiலாளி தப்பிச்சென்ற போது அப்பகுதியில் கடமையிலீடுபட்டிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் அவரை துரத்திச்சென்று கைது செய்து பொலிஸாரிடம் இப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை பொலிஸார் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ். பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் இருவருக்கிடையேயும் நீண்ட உரையாடல் இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே குறித்த நபர் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தினால் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.