SHARE

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லியின் இலங்கைக்கான உத்தியோர்க்கப்பூர்வ விஜயத்தின் முதல் சந்திப்பு இது எனபதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சந்திப்பை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் கரேத் பேய்லி சந்தித்து பேசினார்.

இதன்போது பாதுகாப்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகள் குறித்தும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Print Friendly, PDF & Email