SHARE

பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பினையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதாக இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திரதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ புலம்பெயர் தமிழர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற செய்கையினூடு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து சட்ட ஆலோசகர் கீத் குலசேகரத்தின் வழிகாட்டுதலின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில்
ICPPG பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கு ஒன்றினை தொடர்ந்தது.

சுமார் 21 மாதகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்றய தினம் வழங்கப்பட்டது. அதில் பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்று அவருக்கு எதிராக அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்கிற்கான செலவீனங்களை வழங்குமாறும் கட்டளையிட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கின் வெற்றியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதாக பெருமிதம் கொள்வதாக ICPPG இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,

மேற்படி வழக்கினை பலமுறை ஒத்திவைத்து தாமதப்படுத்தி அதனை கைவிடுமாறு கட்டாயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்றிருந்த போதிலும் இறுதியாக அது முடிவுக்கு வந்துள்ளமை பிரித்தானிய நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

மேலும் பிரியங்கா பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு தொடுநர்களான மயூரன் சதானந்தன், வினோத் பிரியந்த பெரேரா, கோகுலகிருஷ்ணன் நாராயன சாமி மற்றும் சாட்சிகளான சபேஸ்ராஜ் சத்திய மூர்த்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம். சோக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

அவர்களின் துணிச்சலும் அயராத முயற்சியுமே இந்த வழக்கினை தொடர காரணமாக அமைந்தது.

அதேவேளை தமிழ் சமூகத்தின் சார்பாக ICPPG இந்த முக்கிய வெற்றியை அடைவதற்கு அர்பணிப்புடன் சேவையாற்றிய வழக்கறிஞர்களான Peter Carter QC, சாந்தி சிலகுமாரன் மற்றும் பொதுநலன் சட்ட மையத்தின் வழக்குரைஞர்களான Paul Heron மற்றும் Helen Mowatt ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றது.

மேலும் இந்த வழக்கை சாத்தியமாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவதற்கான கீத் குலசேகரத்திற்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை ICPPG ஒப்புக்கொள்கிறது. அத்துடன் இந்த வெற்றிக்கு பங்காற்றிய ஏனைய வழக்கறிஞர்கள் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICPPG வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

Print Friendly, PDF & Email