SHARE
image_pdfPRINT

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோட்டபய ராஐபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவரான மகிந்த ராஐபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் வருகைக்கு எதிர்பினை வெளியிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது “கோட்டாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, எமது மக்களை கடத்தாதே, ஐ.நா அமைதிப்படையே வா, சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, கோட்டாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.