SHARE
image_pdfPRINT

மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி நீரோடையில் இருந்து இன்று (27) பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராகிய மாரிமுத்து ராகினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனின் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த நிலையில் இவ்வாறு களுவங்கேணி போட்டுவாடி நீரோடை பகுதியில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.