SHARE
image_pdfPRINT

நீதிமன்ற கட்டளையை மீறிய பௌத்த தேரர்களை உடனடியாக பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அத்துடன் உடனடியாக நீதிமன்ற கட்டளையை மீறிய தேரர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சட்டம் ஒழுங்கு என்பது மக்கள் மத்தியில் கேள்விக் குறியாக மாறிவிடும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.

சட்டத்தரணி சுகாஸினை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கியமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் நீதிமன்ற தீர்ப்பை மீறியமை, நீதிமன்ற தீர்ப்பை மீறி பொது மக்களை தாக்கியமை, நீதிமன்ற தீர்ப்பை கொண்டு சென்ற சட்டத்தரணிகளை தாக்கியமை, நீதிமன்ற கட்டளை அவமதிப்பு போன்றவற்றுக்காக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்ட சட்டத்தரணிகள் சங்ககளும் பணி பகிஸ்கரிப்பு செய்தல் வேண்டும் என அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.