SHARE
image_pdfPRINT

இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்திலுள்ள நடேசலிங்கம் – பிரியா குடும்பத்துக்கு ஆதரவாக மெல்போனில்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த குடும்பத்தை அவர்கள் முன்னதாக வாழ்ந்து வந்த பிலோலே பகுதியிலேயே வாழ அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

நடேசலிங்கம்  மற்றும் பிரியாவுடன், அவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் பிறந்த 2 மற்றும் 4 வயது பெண் பிள்ளைகளும் இந்த நாடுகடத்தல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த குடும்பத்தினரின் புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை நேற்று முன்தினம் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் அது தடுக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என அவுஸ்ரேலியாவில் உள்ள ஏதிலிகளுக்கு ஆதரவான அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.