SHARE

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று லண்டனில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்துள்ள போதிலும் இலங்கை இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கான எந்தவொரு பதிலும் இன்றுவரை தரப்படவில்லை.

அந்தவகையில் அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான இன்றைய நாளில் தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே ஈழத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களிற்கு வலுசேர்க்கும் முகமாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பிரித்தானிய அரசும் சர்வதேசமும் விரைந்து முடிவுகளை பெற்றுத்தருமாறு கோரியும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் Trafalgar சதுக்கத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமாகி மாலை 4 மணிவரை தொடர்ந்த இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களதும் அவர்களை சார்ந்தவர்களதும் வலிகளை சித்தரிக்கும் விதியோர கண்காட்சி ஒன்று வைக்கப்பட்டிருந்ததுடன் காட்சி நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email