SHARE
image_pdfPRINT

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிபெற்ற மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் இன்று புதன்கிழமை அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமியத்தே மில்லாது இப்ராஹிம்அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 116 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.