SHARE
image_pdfPRINT

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாத்தலுக்கான சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாக்கும் சட்டம் 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது. அதனை வலுவூட்டி குற்றச் செயல்களைப் புரிந்தோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச தரத்திற்கு மற்றும் நடைமுறைக்கமைவாக தேவையான ஒழுங்குவிதிகளை உள்ளடக்கி புதிய திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

அத்தோடு 2015 இல 4 கீழான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும்  சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாப்பதற்காக சட்டத்தை மாற்றுவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.