SHARE
image_pdfPRINT

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாலை 2 மணிக்கு இப்போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் இந்து மகா சபையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது,  கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.4F